இது பற்றியது

UNLOCKED என்பது இலங்கையின் எதிர்காலத்தை உருவாக்க உதவும் வகையில் மிக்கிய பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவும் ஆய்வுகளை ஊக்குவிக்கவும் இடமளிக்கும் ஓர் அரங்கமாகும். கடும் வறுமையை ஒழிக்கவும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிக்கவும் மக்களிடையே ஏற்றத்தாழ்வுளைக் குறைக்கவும் அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் பங்களிப்புச் செய்யக்கூடிய புதிய சிந்தனைகள் மற்றும் தீர்வுளைப் பேணி வளர்ப்பதற்கான ஒரு வாய்ப்பை அது வழங்குகின்றது.

 

UNLOCKED அரங்கம் 2014ஆம் ஆண்டிலிருந்து UNDP ஶ்ரீலங்கா தலைமை தாங்கி வழிநடத்தும் வலைப்பதிவுத் தளத்தின் ஒரு விவாக்கமாகும். “இளைஞரும் அபிவிருத்தியும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும் வாய்ப்பை இந்த வலைப்பதிவுத் தளம் இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்கியது. இப்போது அது SDG ஒருங்கிணைக்கப்பட்ட தளம் (ISP)  என்று அழைக்கப்படும் பெரிய முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாகச் செயற்படுகின்றது.  ISP என்பது புதிய தரவு மூலோபாயங்கள், தகவலறிந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கும் கொள்கை உருவாக்கம் என்பவற்றிற்கு ஒரு பரிசோதனைக் களமாக அமைகின்றது. நிலைக்குத்தான, தனித்தனியான தீர்வு வழிகளிலிருந்து விலகிச்செல்லும் இந்த வேலைத்திட்டம், நிலைபெறு தன்மையுள்ள அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதற்காக தரவுகள், ஆய்வுகள், எண்ணக்கருக்கள் ஆகிய யாவும் உள்ளடங்கிய “தனியொரு களஞ்சியத்தை” உருவாக்கும் பொருட்டு, வெவ்வேறு புத்தாக்கங்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்தைக் கொண்டதாகும்.

 

வலைப்பதிவுத் தளத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களில் பங்குபற்ற விரும்பும் எவரும் அவ்வாறு பங்குபற்றலாம். ஆர்வமுள்ளவர்கள் நடப்பிலுள்ள ஒரு கருத்தரங்கிற்கு விரிவான பங்களிப்பைச் செய்வதன் மூலம் அல்லது கருத்தை வெளியிடுவதன் மூலம் கருத்துப் பரிவர்த்தனையில் பங்குபற்ற முடியும். அவர்கள் சமர்ப்பிக்கும் பங்களிப்புக்களில் கட்டுரைகள், அபிப்பிராய வெளிப்பாடுகள், vlogs, podcasts, தரவுப் பகுப்பாய்வுகள், infographics, blogs மற்றும் படக் கதைகள் என்பன உள்ளடங்கலாம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்களிப்பாளர்களின் குழுவினால் கலந்துரையாடல்கள் தொடக்கிவை6க்கப்படும். ஒவ்வொரு உரையாடலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நீடிக்கும். ஒவ்வொரு கலந்துரையாடலினதும் விடயப்பொருளானது நிலைபெறு தன்மையுள்ள அபிவிருத்தி இலக்குக்கள் (SDGs) ஒன்றின் அல்லது பலவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கும். ஒரு கலந்துரையாடல் முடிவடைந்ததும், கலந்துரையாடல்கள் தொடர்பில் பிரதான பங்களிப்புச் செய்த நபர்கள் இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுளை வடிவமைக்கும் கொள்கை அறிக்கைளை உருவாக்குவதற்கு உதவுவார்கள்.

 

 

திட்ட கூட்டாளர்கள்

  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.