சமர்ப்பிக்கவும்

பங்களிப்புச் செய்பவர்ளை வரவேற்கின்றோம்…

உங்கள் பங்களிப்பைச் சமர்ப்பிப்பதற்கு முன், தயவுசெய்து கீழுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளை வாசியுங்கள்.

  • சகல கட்டுரைகளும், கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளவாறு, தற்போது கவனம் செலுத்தப்படும் அல்லது இனிமேல் கவனம் செலுத்தப்படவிருக்கும் விடயப்பொருள்கள் சார்ந்தவையாக இருக்க வேண்டும்.
  • சகல கட்டுரைகளும், MS Word ஆவணங்களாக, MP4/WMA அல்லது MP3 கோப்புகளாக, JPG/PNG (1368×908 px க்கு குறைந்த resolution உடைய) கோப்புகளாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  PDF ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்ட மாட்டா.
  • சம்பந்தப்பட்ட நபரின் சொந்தப் படைப்புகள் மட்டுமே சமர்ப்பிக்கப்படலாம். சமர்ப்பிக்கப்படும் கட்டுரை ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருந்தால், அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட வெளிபீட்டின் பெயர் மற்றும் திகதி தெரிவிக்கப்பட வேண்டும்.
  • சகல கட்டுரைகளும், ஒழுக்கநெறி மற்றும் சிறந்த நடைமுறை நியமங்கள் அனுசரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக மீளாய்வு செய்யப்பட்டுத் திருத்தப்படும்.
  • கட்டுரை பிரசுரிக்கப்படுவதற்கு முன்னர், அதன் பூர்வாங்க அச்சுப்பிரதியொன்று இறுதி அங்கீகாரத்திற்காக அதனைச் சமர்ப்பித்தவருக்கு அனுப்பப்படும்.
  • கட்டுரை 1500 சொற்களுக்கு  மேற்படக் கூடாது.
  • சகல மேற்கோள்களும் இறுதிக் குறிப்புகளாகப் பதியப்பட வேண்டும். இந்த இறுதிக் குறிப்புகள் அரபு எண்களில் இலக்கமிடப்பட வேண்டும்.
  • ஆதாரக் குறிப்புகள் யாவும், மேற்கோள்கள் மற்றும் ஆதாரக் குறிப்புகள் என்ற தலைப்பின் கீழ் காட்டப்பட்டுள்ள மாதிரியின் வடிவத்தில் இருக்க வேண்டும்.
  • சகல கட்டுரைகளும் தெளிவான தலைப்புகள், உப தலைப்புகள், கட்டுரையாளரின் பெயர் என்பவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
  • உருவப்படங்கள், அட்டவணைகள் மற்றும் வரைபடங்கள் அனைத்தும் பொருத்தமான தலைப்புகளைக் கொண்டிருக்க வேண்டும். படங்கள் அவற்றின் தலைப்புக்களையே கோப்புப் பெயர்களாகக் கொண்டு சேமிக்கப்படுவதை உறுதிப்படுத்தவும்.
  • ஆக்கியோனுரிமை கொண்ட உருவப்படங்கள், ஒலி மற்றும் காணொளி கோப்புகள் பயன்படுத்தப்படுமாயின், அதற்கான அனுமதியைப் பெறுவது கட்டுரையாளரின் பொறுப்பாகும்.
  • உருவப்படங்கள், ஒலி மற்றும் காணொளி கோப்புகள் யாவும் அவற்றின் மூலப் படைப்பாளிகளின் விபரங்கள், தேவையான வலைத்தள இணைப்புகள் மற்றும் அனுமதிகளுடன் ஆக்கத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
  • கட்டுரயை அனுப்பும்போது மின்னஞ்சலின் விடயக் கட்டத்தில் கட்டுரையின் தலைப்பைக் குறிப்பிடவும். மின்னஞ்சலின் பிரதான பகுதியில் பின்வருவனவற்றைக் குறிப்பிடவும்.
    1. கட்டுரையாளரின் பெயர்
    2. கட்டுரையின் தலைப்பு
    3. கட்டுரையில் கவனம் செலுத்தப்படும் விடயப்பொருள் அல்லது உப தலைப்பு
    4. கட்டுரையாளர் பற்றிய விபரங்கள்
    5. கட்டுரை உள்ளடக்கத்தின் சுருக்கம் (150 சொற்களுக்கு உட்பட்டது)
  • கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்கோ அல்லது அதன் மீளாய்வு மற்றும் பிரசுரத்திற்கோ கட்டணம் எதுவும் கிடையாது.
  • உள்நுலைக அல்ைது பதிவவசய்க
  • கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா
  • புதிய கடவுச்சொல்
  • பதிவுவசய்க
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் தகவலை கீழே உள்ளிடவும்
உங்கள் கடவுச்சொல்லை இழந்தீர்களா? உங்கள் பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். மின்னஞ்சல் வழியாக புதிய கடவுச்சொல்லை உருவாக்க நீங்கள் இணைப்பைப் பெறுவீர்கள்.