பாடசாலைக் கட்டமைப்பில் நிலைபெறு தன்மையுள்ள திட்டமிடுதலின் அவசியம்
unlocked team
15 October 2019

SDG செயற்றிட்டத்தினைத் தொடர்ந்து, மாரவில புனித. சேவியர் கல்லூரியின் அதிபர் வணக்கத்திற்குரிய பிதா பியால் ஜயதிலக அவர்களை UNLOCKED அணியினர் சந்தித்தனர். புத்தளம் மாவட்டத்தில் பற்றைக் காடுகள் வளரும் ஓர் இடத்தின் நடுவே A3 பிரதான வீதியோரமாக உறுதியாக அமைந்துள்ள இக் கல்லூரியில் 1,700க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். எனினும், கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் மழைக் காலத்தில் இக் கல்லூரி வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்படுகிறது என்று வணக்கத்திற்குரிய பிதா ஜயதிலக கூறுகின்றார்.

நிலைபெறு தன்மையுள்ள சிறந்த நடைமுறைகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதன் மூலமும் மாணவர்களுக்கு இலவச காலையுணவை வழங்க உதவும் தோட்டம் ஒன்றை பேணும் வகையில் நீர்ச் சேமிப்பு முறையொன்றை உருவாக்க மாணவர்களுக்கு உதவுவதன் மூலமும் இக் கல்லூரி முன்னுதாரணமாக விளங்குகின்றது. துரதிர்ஷ்டவசமாக, இப் பாடசாலைத் தோட்டம் கடந்த மே மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அழிவடைந்தது. இந்த வெள்ளத்திற்குக் காரணம் முறையற்ற நகரத் திட்டமிடலும் வீதி அமைப்புமே என்று அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருமுகமாக் கூறுகின்றனர்.

 

“வீதிகள் முன்யோசனையின்றி அமைக்கப்பட்டதால், எமது பாடசாலை இப்போது வீதியைவிட தாழ்வான மட்டத்தில் உள்ளது” என்று அருட் தந்தை ஜயதிலக கூறுகின்றார். “வீதியில் பல படைகள் தார் கலவை இடப்பட்டபோதிலும், வீதியில் விழும் மழை ஓடுவதற்கு முறையான வடிகால் அமைப்பு எதுவும் கிடையாது. மழை நீர் பாடசாலைக்குள் புகுந்து பாடசாலைச் சொத்துகளை நாசம் செய்வதுடன் மாணவர்களின் கல்வியையும் சீர்குலைக்கின்றது” என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

முறையற்ற வீதித் திட்டமிடல் காரணமாக மாரவிலவில் உள்ள புனித சேவியர் கல்லூரி கடும் வெள்ளப்பெருக்கிற்கு முகங்கொடுக்கின்றது.

காலநிலை மாற்றமும் நகரங்களின் எதிர்ப்புத்திறனும் என்ற தலைப்பில் தற்சமயம் இடம்பெறும் UNLOCKED கலந்துரையாடல் தொடர்பாக வண. பிதா ஜயதிலக தனது கருத்தை வெளியிடுகையில், “சுற்றடாலுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைப் பற்றி ஆராயாமல் இது போன்ற வீதி அமைப்பு அல்லது வேறேதும் நகர்ப்புற அபிவிருத்தி வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கு ஒரு தேசிய கொள்கைத் திட்டம் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்திக் கூறினார். “இது அதிகாரிகளுக்கு ஒரு சிறிய சம்பவம் போலத் தெரிந்தாலும், 1700க்கு மேற்பட்ட மாணவர்களின் கல்வியைச் சீர்குலைத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் விடயமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முறையற்ற வீதித் திட்டமிடல் காரணமாக மாரவிலவில் உள்ள புனித சேவியர் கல்லூரி கடும் வெள்ளப்பெருக்கிற்கு முகங்கொடுக்கின்றது.

காலநிலை மாற்றமும் நகரங்களின் எதிர்ப்புத்திறனும் என்ற தலைப்பில் தற்சமயம் இடம்பெறும் UNLOCKED கலந்துரையாடல் தொடர்பாக வண. பிதா ஜயதிலக தனது கருத்தை வெளியிடுகையில், “சுற்றடாலுக்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைப் பற்றி ஆராயாமல் இது போன்ற வீதி அமைப்பு அல்லது வேறேதும் நகர்ப்புற அபிவிருத்தி வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கு ஒரு தேசிய கொள்கைத் திட்டம் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்திக் கூறினார். “இது அதிகாரிகளுக்கு ஒரு சிறிய சம்பவம் போலத் தெரிந்தாலும், 1700க்கு மேற்பட்ட மாணவர்களின் கல்வியைச் சீர்குலைத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் விடயமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலையின் சில கட்டடங்கள் ஒன்றிற்கொன்று மிக நெருக்கமாக இருப்பது, மேலதிக மின்சக்தி நுகர்வுக்கு வழிகோலுகின்றது

பாடசாலையிலுள்ள இரண்டு கட்டடங்களைச் சுட்டிக்காட்டிய வண. பிதா ஜயதிலக, “இந்த இரு கட்டடங்களையும் பாருங்கள். ஒரு கட்டடத்திற்கான காற்றோட்டத்தையும் வெளிச்சத்தையும் மற்றைய கட்டடம் தடுக்கின்றது. எனவே, இக் கட்டடங்களில் வெப்பத்தைத் தணிக்கவும் வெளிச்சத்தை ஏற்படுத்தவும் நாம் அதிக மின்சாரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. நாட்டிலுள்ள சகல பாடசாலைகள் தொடர்பாகவும் ஒரேசீரான சிறந்த திட்டமிடல் அவசியம்” என்று கூறினார்

Determined to lead by example the teachers at the school strives to provide the students with a nutritious breakfast using sustainably grown produce from the school's garden
உதாரணத்தின் மூலம் மாணவர்களை வழிநடத்த உறுதிபூண்டுள்ள பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலைத் தோட்டத்திலிருந்து பெறப்படும் உற்பத்திகளைக் கொண்டு மாணவாகளுக்குப் போஷாக்கான காலையுணவை வழங்க முயல்கின்றனர்

 

Students line up to receive their nutritious breakfast
போஷாக்கான காலையுணவைப் பெறுவதற்கு மாணவர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

 

நிலைபெறு தன்மையுள்ள தீர்வுகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கும் அது தொடர்பான சவால்களுக்கும் முகங்கொடுக்கப் பாடசாலைகளுக்கு உதவக்கூடிய ஓர் ஒழுங்கு முறையான கட்டமைப்புத் திட்டமிடல் கொண்டுவரப்பட வேண்டுமென, கல்வித் துறையில் பேரார்வத்துடன் செயற்பட்டுவரும் வண. பிதா ஜயதிலக கோரிக்கை விடுக்கின்றார். “பாடசாலைகளில் ஆரம்பியுங்கள். உதாரணத்தின் மூலம் எமது பிள்ளைகளுக்கு வழிகாட்டுங்கள். அப்போதுதான் அவர்கள் சிறந்த எதிர்காலத்திற்கான மரபுரிமையைப் பெற்றுக்கொள்வார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

UNLOCKED என்பது உங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உங்களுக்கு இடமளிக்கும் ஒரு பகிரங்க களமாகும். காலநிலை மாற்றப் பிரச்சனைகளுக்குத் தாக்குப்பிடிக்கவும் அவற்றைக் குறைக்கவும் ஆற்றல் கொண்ட நகரங்களையும் பட்டணங்களையும் இலங்கை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பது குறித்து உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க இக் கருத்துக் களம் 2019 ஓகஸ்ட் வரை திறந்திருக்கும். [email protected] ஊடாக எம்முடன் தொடர்புகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

Comments(0)

  • Login or Register
  • Forgot Password
  • New Password
  • Register
Enter your information below
Enter your information below
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.